RSS Feed

முஷ்டி மைதுனம் - சர்வரோக நிவாரணி

Posted by: சூர்யநிலா / Category:


100 பேரில் முஷ்டி மைதுனம் செய்கிறேன் என்று ஒத்து கொண்டவர்கள் 99 பேர் என்றால் ஒருவன் பொய்யன் என்று சிக்மன்ட் ப்ராய்ட் கூறினார். கரமைதுனம் என்பது அருவருக்கத்தக்க செயலோ, முறையோ அல்ல. அது ஒரு இயற்கையான நிகழ்வு. ஆண், பெண் இருவருக்கும் பொதுவான ஓர் வடிகால். 

தலைவர் முருகேசன் சொல்வது போல் நிறைவேறாத காம இச்சையுடன் அலைபவன் நடமாடும் வெடிகுண்டுதான். முற்காலம் போல் அல்லாமல் இக்காலத்தில் ஏகப்பட்ட எக்ஸ்போஷர். அந்த காலத்திலும் முறைகேடானா உறவுகள் இருந்திருக்கின்றன. ஆணுக்கு எடிபஸ் காம்ப்ளெக்ஸ், பெண்ணுக்கு எலெக்ட்ரா காம்ப்ளெக்ஸ். இதுவே ஆண்களுக்கு வயதான் பெண்களிடம் தோன்றும் காம இச்சை. எந்த வகையில் பார்த்தாலும் மனைவியை தவிர வேறு பெண்களிடம் போய் நோய் இத்தியாதி பெற்றுவருவதை விட கர மைதுனம் மிக மிக பாதுகாப்பானது. மேலும் சில பெண்களை தொட்டான் கெட்டான் என்ற வழக்கிற்க்கேற்ப நொடித்து போனவர் பலபேர். 

கர மைதுனத்தின் சிறப்புகள்

செரோடொனின் , ஆக்சிடோசின் சுரப்பு அதிகமாவதால் நிம்மதியான உறக்கத்திற்கு வழி செய்கிறது.

ப்ரோஸ்டேட் கான்சர் வராது 

ரத்த அழுத்தம் குறைகிறது 

ஸ்ட்ரெஸ் குறைகிறது 

பெல்விக் தசைகள் வலுவடைகிறது 

தப்பான பல லாட்ஜ் வைத்தியர்களினால் பல இளைஞர்களின் வாழ்வு சீரழிக்கப்படுகிறது. ஆகவே இளைஞர்களே கூடிய மட்டும் முஷ்டி மைதுனம் செய்யுங்கள். வாழ்வில் வெற்றிகளை குவியுங்கள்!!!!!     


Read more »

பெண்களின் சிறுநீர்க்கசிவு பிரச்சினைக்கு தீர்வு

Posted by: சூர்யநிலா / Category:


சில பெண்கள் சிரித்தால், இருமினால், தும்மினால்  அவர்களுக்கு சிறுநீர் அடக்க முடியாமல் உடையிலேயே கசிந்து விடலாம். இது பெண்களுக்கு மட்டுமே வரும் உடனடியாக கவனிக்க வேண்டிய நோய் பாதிப்பாகும். ஏறத்தாழ 50 சதவீதம் பெண்களுக்கு சிறுநீர் தொடர்பான பாதிப்பு ஏதேனும் ஒன்றாவது இருக்கும். முப்பது வயது கடந்த உடனேயே பெண்களுக்கு இதுபோன்ற பாதிப்புகள் ஆரம்பமாகி விடுகின்றன.

சிறுநீர்க்கசிவை கட்டுப்படுத்தும் சக்தியானது குறைந்து போவதனால்தான் இந்த பாதிப்பு ஏற்படுகின்றது. பொதுவாக சிறு நீர்ப்பை ஒரு ஊஞ்சல் போன்ற தசைகளினால் தாங்கப்பட்டுள்ளது. இந்த தசைகள் பிரசவத்திற்கு பின்னர் சில பெண்களுக்கு சேதமடைந்து விடலாம். மெனோபாஸ் நேரத்தில் மேலும் தளர்ச்சி அடைந்து விடும். சுருங்கி விரியும் தன்மை கொண்ட தசைகள் தான் சிறுநீர்க் குழாயை இறுக மூடி வைத்திருக்கும். சிறுநீர் பிரியும் நேரம் வரையிலும் இறுக பிடித்து வைத்திருக்கும். சாதாரணமாக சிறுநீர் கழிக்க போகும் போது இந்த தசைகள் தளர்ந்து சிறுநீர் பிரியும். ஆனால் பிரச்சினை காரணமாக நிரந்தர மாக தளர்ச்சிக்கு உள்ளானவர்கள் தும்மினால், வேகமாக அதிர்ந்து நடந்தால், படிகள் இறங்கினால், சிரித்தால் சிறுநீர் கசிவு ஏற்படும். அதிகம் குழந்தை பெற்ற பெண்மணிகளுக்கும் இந்தப் பிரச்சினை வரலாம். பிரசவத்திற்குப் பிறகு ஜpகமகஇநி போன்ற உடற்பயிற்சி செய்து தளர்ந்த தசைகளை பலப்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால் பெண்கள் எவருமே பிரசவத்திற்கு பிறகு உடற்பயிற்சிகளை மேற் கொள்வதில்லை. உடல் பருமன் ஆனவர்களுக்கும் இத்தகைய பாதிப்பு வரலாம். 



இத்தகைய பிரச்சினைக்கு எளிதான தீர்வு வந்துள்ளது.  SLING என்பது பத்து நிமிடத்தில் மாட்டப்படும் ஒரு எளிமையான சிகிச்சை ஆகும். அறுவை சிகிச்சை எதுவும் தேவை இல்லை. இக்குறைபாடிற்கு மிகச்சிறந்த சிகிச்சை முறை இதுவே ஆகும்.


Read more »

பி.டி., கத்தரிக்காய் பயிரிட்டால் 200க்கும் மேற்பட்ட செடிகள் அழியும் : நம்மாழ்வார் எச்சரிக்கை

Posted by: சூர்யநிலா / Category:


""பி.டி., கத்தரி சாகுபடி செய்யும் பட்சத்தில், கத்தரி இனத்தை சேர்ந்த தூதுவளை, சுண்டக்காய், கண்டகத்தரி, மணத்தக்காளி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட பாரம்பரிய ரகங்கள் அழிந்து விடும்,'' என இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் கூறினார்.கோவை வேளாண் பல்கலை மற்றும் அமெரிக்கா விதை நிறுவனமான மான்சான்டோவின் இந்திய பங்குதாரர் "மஹிகோ' நிறுவனமும் காய்புழு தாக்குதலை கட்டுப்படுத்தும் மரபணு மாற்றம் செய்த பி.டி., கத்தரிக்காயை உற்பத்தி செய்துள்ளது.


பி.டி.,கத்தரிக்காய்க்கு, இந்திய உயர் தொழில் நுட்பவியல் ஒழுங்குமுறை அமைப்பு, மத்திய அமைச்சகத்துடன் இணைந்த ஜெனிடிக் இன்ஜினியரிங் ஒப்புதல் கமிட்டியும் அங்கீகாரம் வழங்கியுள்ளது.இந்தியாவில் அதிகரிக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப, காய்கறி உற்பத்தியை பெருக்குவதற்காக, தட்ப வெப்ப நிலைக்கு தாக்கு பிடித்து, அதிக அளவில் காய்க்கும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பி.டி., கத்தரிக்கு அனுமதி வழங்க, மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.பி.டி., கத்தரியை சாகுபடி செய்வது தொடர்பாக, விவசாயிகளின் கருத்து கேட்க, மத்திய அரசு இம்மாதம் நாடு முழுவதும் ஆறு மாநில தலைநகரங்களில் கூட்டம் நடத்தவுள்ளது.


பி.டி., கத்தரி தொடர்பாக அகில இந்திய இயற்கை உழவர் இயக்க தலைவரும், இயற்கை விஞ்ஞானியுமான நம்மாழ்வார் கூறியதாவது:விவசாயிகள் கருத்து கேட்பு கூட்டம் முடிந்த பின்னர் பி.டி., கத்தரி சாகுபடி செய்ய மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கினாலும் ஆச்சரியமில்லை. ஆனால், தமிழகத்தில் பி.டி., கத்தரி சாகுபடி செய்தால், விவசாயிகளிடம் நேரில் சென்று பி.டி., கத்தரியால் ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்.தற்போது பி.டி., கத்தரிக்கு அனுமதி வழங்கினால், படிப்படியாக, அனைத்து காய்கனிகளும் மரபணு மாற்றம் செய்யப்பட்டு விடும். பி.டி., கத்தரி குறித்து ஆராய்ச்சி செய்யும் இந்திய மாணவர்களுக்கு வெளிநாட்டு நிறுவனங்கள் உதவித் தொகை வழங்குகிறது. அதனால்தான் பி.டி., கத்தரி எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாது என, அவர்களும் தெரிவிக்கின்றனர். ஆனால், பி.டி., கத்தரி சாப்பிட்டால் புற்றுநோய், மலட்டுதன்மை, அலர்ஜி போன்ற நோய்கள் வரும் அபாயம் உள்ளது.


தூதுவாளை, கண்டங்கத்தரி, மணதக்காளி, சுண்டக்காய் என, கத்தரி இனத்தில் 500க்கும் மேற்பட்ட பாரம்பரிய ரகங்கள் நாட்டில் இருந்தது. இவற்றில் பெரும்பாலான ரகங்கள் காலப்போக்கில் அழிந்து விட்டன.பி.டி., கத்தரி சாகுபடி செய்தால், அதன் விதையை எடுத்து மீண்டும் உபயோகப்படுத்த முடியாது. பதிலாக, அதனை உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் இருந்து தான், ஒவ்வொரு முறையும் விதைகள் வாங்கியாக வேண்டும். பி.டி.,கத்தரி சாகுபடி செய்யும் போது, அந்த பூக்களில் அமரும் பூச்சிகள்தான், பிற கத்தரி இன பூக்களுக்கும் சென்று மகரந்த சேர்க்கையில் ஈடுபடும்.அவ்வாறு மகரந்த சேர்க்கையில் ஈடுபடும் பூச்சிகள், பிற கத்தரி இன பூக்களில் அமரும் போது, அந்த பூக்களும் மலடாகி காலப்போக்கில் கத்தரி இனமே முற்றிலும் அழிந்து விடும். மீண்டும் சாகுபடி செய்வதற்காக எடுத்து வைக்கும் விதையும் முளைக்காது.


எதிர்காலத்தில், ஒட்டுமொத்த விவசாயிகளும் பி.டி.,கத்தரி விதை உற்பத்தி செய்யும் நிறுவனத்தை நம்பியே இருக்க வேண்டிய நிலை ஏற்படும்.நாட்டின் ஒட்டுமொத்த காய்கறி உற்பத்தியும் ஒரு சில தனியார் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் வந்துவிடும். அவர்கள் எவ்வளவு அதிக விலை நிர்ணயம் செய்தாலும், அந்த விலைக்கு விதைகளை வாங்கியே ஆக வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். விவசாயிகளும், பொதுமக்களும் எச்சரிக்கையாக இருந்தால் மட்டுமே, இந்த ஆபத்தை தடுக்க முடியும்.இவ்வாறு நம்மாழ்வார் கூறினார்.


Read more »

பெண்கள் வயாக்ரா

Posted by: சூர்யநிலா / Category:




பெண்களின் செக்ஸ் உணர்வை தூண்டக்கூடிய மருந்தை கண்டு பிடித்துள்ளனர். இதன் பெயர் ப்ளிபன்செரின் (Flibanserin). ஆண்களுக்கு வயாக்ரா போல பெண்களுக்கு இது பயன்படுமாம். இன்னும் சில மாதங்களில் சந்தைக்கு வந்துவிடும். பக்க விளைவுகள் என்ன என்று தெரியவில்லை. 

 


Read more »