சில பெண்கள் சிரித்தால், இருமினால், தும்மினால் அவர்களுக்கு சிறுநீர் அடக்க முடியாமல் உடையிலேயே கசிந்து விடலாம். இது பெண்களுக்கு மட்டுமே வரும் உடனடியாக கவனிக்க வேண்டிய நோய் பாதிப்பாகும். ஏறத்தாழ 50 சதவீதம் பெண்களுக்கு சிறுநீர் தொடர்பான பாதிப்பு ஏதேனும் ஒன்றாவது இருக்கும். முப்பது வயது கடந்த உடனேயே பெண்களுக்கு இதுபோன்ற பாதிப்புகள் ஆரம்பமாகி விடுகின்றன.
சிறுநீர்க்கசிவை கட்டுப்படுத்தும் சக்தியானது குறைந்து போவதனால்தான் இந்த பாதிப்பு ஏற்படுகின்றது. பொதுவாக சிறு நீர்ப்பை ஒரு ஊஞ்சல் போன்ற தசைகளினால் தாங்கப்பட்டுள்ளது. இந்த தசைகள் பிரசவத்திற்கு பின்னர் சில பெண்களுக்கு சேதமடைந்து விடலாம். மெனோபாஸ் நேரத்தில் மேலும் தளர்ச்சி அடைந்து விடும். சுருங்கி விரியும் தன்மை கொண்ட தசைகள் தான் சிறுநீர்க் குழாயை இறுக மூடி வைத்திருக்கும். சிறுநீர் பிரியும் நேரம் வரையிலும் இறுக பிடித்து வைத்திருக்கும். சாதாரணமாக சிறுநீர் கழிக்க போகும் போது இந்த தசைகள் தளர்ந்து சிறுநீர் பிரியும். ஆனால் பிரச்சினை காரணமாக நிரந்தர மாக தளர்ச்சிக்கு உள்ளானவர்கள் தும்மினால், வேகமாக அதிர்ந்து நடந்தால், படிகள் இறங்கினால், சிரித்தால் சிறுநீர் கசிவு ஏற்படும். அதிகம் குழந்தை பெற்ற பெண்மணிகளுக்கும் இந்தப் பிரச்சினை வரலாம். பிரசவத்திற்குப் பிறகு ஜpகமகஇநி போன்ற உடற்பயிற்சி செய்து தளர்ந்த தசைகளை பலப்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால் பெண்கள் எவருமே பிரசவத்திற்கு பிறகு உடற்பயிற்சிகளை மேற் கொள்வதில்லை. உடல் பருமன் ஆனவர்களுக்கும் இத்தகைய பாதிப்பு வரலாம்.
இத்தகைய பிரச்சினைக்கு எளிதான தீர்வு வந்துள்ளது. SLING என்பது பத்து நிமிடத்தில் மாட்டப்படும் ஒரு எளிமையான சிகிச்சை ஆகும். அறுவை சிகிச்சை எதுவும் தேவை இல்லை. இக்குறைபாடிற்கு மிகச்சிறந்த சிகிச்சை முறை இதுவே ஆகும்.
Read more »



